http://ifttt.com/images/no_image_card.pngஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் லிட்டன் தாஸ் சதம் விளாச வங்கதேச அணி 155 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஹராரேயில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் (0) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய லிட்டன் தாஸ் (102) சதம் விளாசினார். சாகிப் அல் ஹசன் (19), முகமது மிதுன் (19) நிலைக்கவில்லை. மகமதுல்லா (33), ஆபிப் ஹொசைன் (45) ஓரளவு கைகொடுக்க, வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626455254/BangladeshZimbabweFirstOneDayInternationalCricketLitonDasCentury.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626455254/BangladeshZimbabweFirstOneDayInternationalCricketLitonDasCentury.html