‘பலே’ ஹர்திக் பாண்ட்யா: இலங்கை தொடரில் எதிர்பார்ப்பு | ஜூலை 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடரில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா ரன் மழை பொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை கொழும்புவில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் வரும் ஜூலை 20, 23ல் கொழும்புவில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். கடந்த 2019ல் முதுகுப்பகுதிக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் (6 போட்டிகள்) மட்டும் பங்கேற்றார். வரும் அக்டோபர்–நவம்பரில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடக்க இருப்பதால் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை இலங்கை தொடரில் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக கடைசி கட்ட ஓவரில் ரன் மழை பொழிய வாய்ப்பு உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626455020/HardikPandyaCricketIndiaSriLankaTour.html