http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான 4வது ‘டுவென்டி–20’ போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற விண்டீஸ் அணி 3–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ வேட் (5) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஆரோன் பின்ச் (53), மிட்சல் மார்ஷ் (75) அரைசதம் கடந்தனர். அலெக்ஸ் கேரி (0), மோய்சஸ் ஹென்ரிக்ஸ் (6), ஆஷ்டன் டர்னர் (6) நிலைக்கவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626367805/WindiesAustraliaT20CricketMitchellMarshStarc.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626367805/WindiesAustraliaT20CricketMitchellMarshStarc.html