உலக டெஸ்ட்: புள்ளி முறையில் மாற்றம் | ஜூலை 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் போட்டிக்கான புள்ளி கணக்கிடும் முறையில் புதிய மாற்றத்தை ஐ.சி.சி., கொண்டுவந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் முதல் சீசனுக்கான (2019–2021) பைனலில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி முதல் கோப்பை வென்றது. அடுத்த மாதம் துவங்கும் 2வது சீசன், வரும் 2023 வரை நடக்கவுள்ளது. கடந்த சீசனில் புள்ளி வழங்கும் முறையில் குழப்பம் நிலவியது. இதன்படி ஒரு டெஸ்ட் தொடருக்கு 120 புள்ளி வழங்கப்பட்டது. இதில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 60 புள்ளியும் (ஒரு போட்டிக்கு), ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 24 புள்ளியும் (ஒரு போட்டிக்கு) வழங்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் ரத்தானதால் புள்ளி வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626280951/ICCTestChampionshipSecondSessionNewPointsSystemCricket.html