ஐ.பி.எல்., அனுபவம் கைகொடுக்கும்: புவனேஷ்வர் குமார் நம்பிக்கை | ஜூலை 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடரில் இடம் பெற்றுள்ள இளம் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்., அனுபவம் கைகொடுக்கும்,’’ என, புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள பயிற்சியாளர் டிராவிட், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 18, 20, 23), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 25, 27, 29) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், சேட்டன் சக்காரியா, நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், ருதுராஜ் கெய்க்வாட், வருண் சக்கரவர்த்தி என, 6 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்பட்டனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626108960/BhuvneshwarKumarIndiaSriLankaCricketSeriesIPLExperiencefor.html