http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையின் முடிவு ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான போட்டிகள் கொழும்புவில் நடக்கவுள்ளன. இதற்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்து தொடர் முடிந்து நாடு திரும்பிய இலங்கை அணியினரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் 50, ‘டேட்டா அனாலஜிஸ்ட்’ நிரோஷன் என இருவருக்கும் அபாயகரமான ‘டெல்டா’ கொரோனா பாதிப்பு ஏற்பட, அனைவரும் கூடுதலாக 2 நாள் கொழும்புவில் தனிமைப்படுத்தப்பட்டனர். தவிர, ஒருநாள் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626025135/SriLankaCricketersCoronoTestNegativeResult.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626025135/SriLankaCricketersCoronoTestNegativeResult.html