வங்கதேசம் இமாலய வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் | ஜூலை 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஹராரே டெஸ்டில் அசத்திய வங்கதேச அணி 220 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணி ஏமாற்றியது. ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. ஹராரேயில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 468, ஜிம்பாப்வே 276 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி ஒரு விக்கெட்டுக்கு 284 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 477 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி, 4ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்திருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626024411/HarareTestCricketBangladeshZimbabwe.html