விண்டீசிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா | ஜூலை 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ யில் அசத்திய விண்டீஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. விண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (0), கிறிஸ் கெய்ல் (4) ஏமாற்றினர். சிம்மன்ஸ் (27), ஷிம்ரன் ஹெட்மயர் (20) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய ஆன்ட்ரி ரசல் 28 பந்தில் 51 ரன் (5 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார். விண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 3, மிட்சல் மார்ஷ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625936254/WindiesAustraliaFirstT20CricketPollard.html