http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய வீராங்கனை மிதாலி மீண்டும் முதலிடம் பிடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 762 புள்ளிகளுடன் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர், 9வது முறையாக முதலிடத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (701 புள்ளி), ஹர்மன்பிரீத் கவுர் (594) முறையே 9, 17வது இடத்தில் உள்ளனர். விண்டீஸ் அணி கேப்டன் ஸ்டெபானி டெய்லர், 736 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626787939/ICCRankingWomenCricketMithaliRajShafaliVermaNumberOne.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626787939/ICCRankingWomenCricketMithaliRajShafaliVermaNumberOne.html