மிதாலி ராஜ் ‘நம்பர்–1’ ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஜூலை 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் மிதாலி ராஜ் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 762 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியிலும் அரைசதம் (72, 59, 75* ரன்) கடந்த இவர், 8வது முறையாக முதலிடத்தை கைப்பற்றினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625581718/ICCWomenOneDayInternationalCricketRankingMithaliRajNumber.html