http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடருக்கான இந்திய அணியின் ‘பேட்டிங்’ வரிசையில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும்,’’ என, லட்சுமண் தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண், ஒருநாள் தொடருக்கான இந்திய ‘லெவன்’ அணியை தேர்வு செய்துள்ளார். இதில் துவக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரித்வி ஷாவை அறிவித்துள்ளார். மூன்றாவது இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625847323/SriLankaCricketTourIndiaIXSquadVVSLaxmanSuryakumar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625847323/SriLankaCricketTourIndiaIXSquadVVSLaxmanSuryakumar.html