இங்கிலாந்திடம் வீழ்ந்தது பாக்., | ஜூலை 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கார்டிப் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 35.2 ஓவரில் 141 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பகார் ஜமான் (47), ஷதாப் கான் (30) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 4 விக்கெட் வீழ்த்தினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625764675/EnglandPakistanFirstOneDayInternationalCricketSaqibMahmood.html