http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவேன். ஆனால், கேப்டன் பதவி குறித்து டில்லி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும்,’’ என, ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்கு கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலான டில்லி அணி, 2020ல் எமிரேட்சில் நடந்த தொடரில் பைனல் வரை சென்றது. இங்கிலாந்து தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்த இவர், சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் கேப்டனாக செயல்பட்டார். இதுவரை விளையாடிய 8 போட்டியில், 6 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் எமிரேட்சில் துவங்குகிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625502360/ShreyasIyerIPLT20CricketDelhiCaptaincy.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625502360/ShreyasIyerIPLT20CricketDelhiCaptaincy.html