பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் | ஜூலை 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பயிற்சி போட்டியில் பங்கேற்றனர். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக நேற்று, கொழும்புவில் இந்திய வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ‘டுவென்டி–20’ பயிற்சி போட்டியில் விளையாடினர். இதில் கேப்டன் தவான் தலைமையிலான அணி, துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் வழிநடத்திய அணியை சந்தித்தது. தவான் அணியில் மணிஷ் பாண்டே, ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தனர். புவனேஷ்வர் அணிக்கு விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் செயல்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625502087/IndiaSriLankaTourCricketPracticeMatchDhawanBhuvneshwarKumar.html