http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இங்கிலாந்து அணி 2–0 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இங்கிலாந்து சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி பிரிஸ்டலில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. மழையால் போட்டி துவங்குவதில் தாமதமானது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625417150/EnglandSriLankaThirdOneDayCricketBristolGroundRain.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625417150/EnglandSriLankaThirdOneDayCricketBristolGroundRain.html