மிதாலி ராஜ்யம்: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை | ஜூலை 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் மிதாலி ராஜ். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி வொர்செஸ்டரில் நடந்தது. முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணி 47 ஓவரில் 219 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (49), கேப்டன் மிதாலி ராஜ் (75*) கைகொடுக்க, 46.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625417946/MithaliRajCricketIndiaMostInternationalRuns.html