இந்திய பெண்கள் ஆறுதல் வெற்றி: மிதாலி புதிய சாதனை | ஜூலை 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்து மிதாலி புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–2 என ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி வொர்செஸ்டரில் நடந்தது. மழையால் போட்டி தாகமதமாக துவங்கியது. தலா 47 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625333881/IndiaEnglandWomenOneDayCricketDeepthiSharmaMithaliRaj.html