இந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம்: தொடரை வென்றது இங்கிலாந்து | ஜூலை 01, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. டான்டனில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (22), ஷபாலி வர்மா (44) ஜோடி நல்ல தவக்கம் தந்தது. கேட் கிராஸ் ‘வேகத்தில்’ ஜெமிமா ரோட்ரிக்ஸ் (8), ஹர்மன்பிரீத் கவுர் (19), தீப்தி சர்மா (5), ஸ்னே ரானா (5) வெளியேறினர். தானியா பாட்யா (2), ஷிகா பாண்டே (2) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் மிதாலி ராஜ் (59) அரைசதம் கடந்தார். சோபி எக்லெஸ்டோன் ‘சுழலில்’ பூணம் யாதவ் (10) சிக்கினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625159142/IndiaEnglandWomenOneDayInternationalCricketMithaliRaj.html