http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., பெண்கள் ஒருநாள் போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் மிதாலி, 5வது இடத்துக்கு முன்னேறினார். ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 725 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து ‘நம்பர்–5’ இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் பிரிஸ்டலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 72 ரன் விளாசினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624978322/ICCWomenOneDayRankingCricketMithaliRaj.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624978322/ICCWomenOneDayRankingCricketMithaliRaj.html