http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய ஸ்னே ரானா, தோல்வியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டார்,’’ என, மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நான்கு நாள் டெஸ்டில் விளையாடியது. பிரிஸ்டலில் நடந்த இப்போட்டி ‘டிரா’ ஆனது. இதில் இந்தியாவின் ஸ்னே ரானா 27, பவுலிங்கில் 4 விக்கெட், பேட்டிங்கில் 80 ரன் எடுத்தார். இதன்மூலம் அறிமுக டெஸ்டில் 4 விக்கெட், அரைசதம் கடந்த முதல் இந்திய வீராங்கனையானார். கடந்த 2014ல் இலங்கைக்கு எதிராக ஒருநாள், சர்வதேச ‘டுவென்டி–20’யில் அறிமுகமான ஸ்னே ரானா, கடைசியாக 2016ல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பின் இவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பின், இந்திய அணிக்கு தேர்வானார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624292046/SnehRanaMithaliRajWomenTestCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624292046/SnehRanaMithaliRajWomenTestCricket.html