http://ifttt.com/images/no_image_card.pngஷபாலி வர்மா, மூன்று வித போட்டியிலும் தவிர்க்க முடியாத வீராங்கனையாக வலம் வருவார்,’’ என, மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நான்கு நாள் டெஸ்டில் விளையாடியது. பிரிஸ்டலில் நடந்த இப்போட்டி ‘டிரா’ ஆனது. முதல் இன்னிங்சில் 231 ரன்னுக்கு சுருண்டு, ‘பாலோ–ஆன்’ பெற்ற இந்திய அணிக்கு ஷபாலி (63), தீப்தி (54), ஸ்னே ரானா (80*) கைகொடுக்க, கடைசி நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 344 ரன் எடுத்திருந்தது. இப்போட்டியில் அறிமுகமான இந்தியாவின் ஷபாலி வர்மா, இரு இன்னிங்சிலும் அரைசதம் (96, 63) கடந்தார். இதன்மூலம் ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624211152/IndiaEnglandWomenTestCricketShafaliVermaManOfthe.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624211152/IndiaEnglandWomenTestCricketShafaliVermaManOfthe.html