http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா 2வது இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 386 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் (385 புள்ளி) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (423) நீடிக்கிறார். தமிழகத்தின் அஷ்வின், 353 புள்ளிகளுடன் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623252712/ICCTestPlayersRankingJadejaKohliRohitRishabhAshwin.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623252712/ICCTestPlayersRankingJadejaKohliRohitRishabhAshwin.html