http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் எல்கர், குயின்டன் அரைசதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 298 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா, விண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்து திணறியது. பின் இணைந்த கேப்டன் டீன் எல்கர், குயின்டன் டி காக், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பொறுப்பாக ஆடிய எல்கர் (77) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய குயின்டன் அரைசதமடித்தார். முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன் எடுத்திருந்தது. குயின்டன் (59), முல்டர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624126247/WindiesSouthAfrica2ndTestCricketQuintonDeKockDean.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624126247/WindiesSouthAfrica2ndTestCricketQuintonDeKockDean.html