இந்திய பெண்கள் ‘பாலோ–ஆன்’: ஷபாலி மீண்டும் அரைசதம் | ஜூன் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் 231 ரன்னுக்கு சுருண்ட இந்திய பெண்கள் அணிக்கு ‘பாலோ–ஆன்’ வழங்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சில் பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா அரைசதம் கடந்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 396/9 (‘டிக்ளேர்’) ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்திருந்தது. ஹர்மன்பிரீத் (4), தீப்தி சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624037676/IndiaEnglandWomenTestCricketShafaliVermaHalfCentury.html