ஆளப்போறான் கோஹ்லி... டெஸ்ட் ‘உலகம்’ எல்லாமே: இன்று இந்தியா–நியூசி., பைனல் ஆரம்பம் | ஜூன் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் சீசனில் (2019–2021), புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த கோஹ்லி தலைமையிலான இந்தியா (72.2%), வில்லியம்சன் வழிநடத்தும் நியூசிலாந்து (70.0%) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இன்று பைனல் துவங்குகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623952309/ICCWorldTestChampionshipFinalIndiaNewZealand.html