http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ஷபாலி, மந்தனா அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நான்கு நாள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. பிரிஸ்டலில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. சோபியா (12), கேத்ரின் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் கேத்ரின் புருன்ட் (8), ஜுலன் கோஸ்வாமி ‘வேகத்தில்’ வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சோபியா டங்க்லி அரைசதம் கடந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது தீப்தி சர்மா ‘சுழலில்’ சோபி எக்லெஸ்டோன் (17) சிக்கினார். அடுத்து வந்த அன்யா ஷ்ரப்சோல், அதிவிரைவாக ரன் சேர்த்தார். 33 பந்தில் 47 ரன் (ஒரு சிக்சர், 6 பவுண்டரி) விளாசிய இவர், ஸ்னே ரானா பந்தில் அவுட்டானார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623951929/IndiaEnglandWomenTestCricketShafaliVermaMandhana.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623951929/IndiaEnglandWomenTestCricketShafaliVermaMandhana.html