http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலுக்காக மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த ‘லெவன்’ அணியில் ஜடேஜா, இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் பைனல் நாளை சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், போட்டியில் விளையாடும் ‘லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் மூன்று வேகம், ஒரு சுழலுக்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தேர்வாகினர். சீனியர் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இடம் பெறவில்லை. ‘சுழலில்’ தமிழகத்தின் அஷ்வின் தேர்வானார். ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவுக்கு இடம் கொடுக்கவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623855789/ICCWorldTestChampionshipFinalIndiaIXSquadSanjayManjrekar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623855789/ICCWorldTestChampionshipFinalIndiaIXSquadSanjayManjrekar.html