இந்திய அணியில் யார்...யார்: ‘உலக’ பைனல் படை அறிவிப்பு | ஜூன் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இதற்காக இங்கிலாந்து வந்துள்ள கோஹ்லி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியினர் சவுத்தாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று, இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., வெளியிட்டது. இதில் மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர், சுழற்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்களான’ வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் இடம் பெறவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772891/WorldTestChampionshipFinalIndiaSquadKLRahulMayankAgarwal.html