தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு: 149 ரன்னுக்கு சுருண்டது விண்டீஸ் | ஜூன் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 149 ரன்னுக்கு சுருண்டது. விண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 298 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணிக்கு தென் ஆப்ரிக்க பவுலர்கள் தொல்லை தந்தனர். ரபாடா ‘வேகத்தில்’ கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (0), ஜேசன் ஹோல்டர் (10) வெளியேறினர். லுங்கிடி பந்தில் கீரன் பாவெல் (5), கேஷவ் மஹாராஜ் ‘சுழலில்’ கைல் மேயர்ஸ் (12), நார்ட்ஜே பந்தில் ராஸ்டன் சேஸ் (4) அவுட்டாகினர். ஷாய் ஹோப் (43), ஜெர்மைன் பிளாக்வுட் (49) ஆறுதல் தந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624212019/SouthAfricaWindiesSecondTestCricketMulderRabada.html