http://ifttt.com/images/no_image_card.pngசகவீரர் மீது மோதியதால் மூளையதிர்ச்சியடைந்த டுபிளசி, மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அபுதாபியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் மோதின. ஆட்டத்தின் 7வது ஓவரில் பெஷாவர் அணியின் டேவிட் மில்லர் அடித்த பந்து ‘பவுண்டரி’ நோக்கி சென்றது. அப்போது அதனை தடுக்க முயன்ற குவெட்டா அணி வீரர் டுபிளசியின் தலை, சகவீரர் முகமது ஹஸ்னைனின் முழங்காலில் பலமாக மோதியது. இதனால் டுபிளசிக்கு மூளையதிர்ச்சி ஏற்பட மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ‘பெவிலியனுக்கு’ அழைத்துச் செல்லப்பட்டார். பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு பதிலாக இப்போட்டியில் சைம் அயுப் விளையாடினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623606492/PakistanPremierLeagueT20CricketFafduPlessisConcussion.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623606492/PakistanPremierLeagueT20CricketFafduPlessisConcussion.html