http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணி கேப்டன் கோஹ்லி, பயிற்சி போட்டியில் பந்துவீசினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சவுத்தாம்ப்டனில் தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள், 5 நாட்களுக்கு பின் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். உலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623519012/IndiaEnglandTestSeriesPracticeMatchViratKohliBowling.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623519012/IndiaEnglandTestSeriesPracticeMatchViratKohliBowling.html