வெற்றியை நோக்கி நியூசிலாந்து: இங்கிலாந்து அணி ஏமாற்றம் | ஜூன் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் பர்மிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 229 ரன் எடுத்திருந்தது. ராஸ் டெய்லர் (46) அவுட்டாகாமல் இருந்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ராஸ் டெய்லர், அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது ஸ்டோன் பந்தில் டெய்லர் (80) அவுட்டானார். ஹென்றி நிக்கோல்ஸ் (21), டாம் பிளன்டெல் (34) நிலைக்கவில்லை. டேரில் மிட்சல் (6), நீல் வாக்னர் (0), மாட் ஹென்றி (12), அஜாஸ் படேல் (20) ஏமாற்றினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623519905/EnglandNewZealand2ndTestCricketMattHenryNeilWagner.html