http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623384110/SriLankaCricketTourIndiaSquadDhawan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623384110/SriLankaCricketTourIndiaSquadDhawan.html