இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்: அகார்கர் எச்சரிக்கை | ஜூன் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் நியூசிலாந்து வேகம், இங்கிலாந்து தட்பவெப்பநிலை போன்றவை இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும்,’’ என, அகார்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் சந்திக்கவுள்ள சவால்கள் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் கூறியது: உலக டெஸ்ட் பைனல் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இருப்பர். டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ, நீல் வாக்னர், ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீசுவர். இவர்களது பந்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும். உயரமான கைல் ஜேமிசன் வேறு விதமாக நெருக்கடி கொடுப்பார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623343094/WorldTestChampionshipFinalNewZealandIndiaAjitAgarkar.html