http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் பைனல் (ஜூன் 18–22), இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4 – செப். 14) பங்கேற்கிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள், சவுத்தாம்ப்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது ‘ரூமில்’ இருந்தபடி உடற்பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது. மூன்று நாட்களுக்கு பின், ‘ஜிம்’, சில குறிப்பிட்ட பகுதிகளில் பயிற்சி மேற்கொள்ள இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623342837/WorldTestChampionshipFinalIndiaPractice.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623342837/WorldTestChampionshipFinalIndiaPractice.html