ஸ்டீவ் ஸ்மித் ‘நம்பர்–1’: டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் | ஜூன் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 886 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் முழங்கை காயம் காரணமாக விளையாடவில்லை. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 891 புள்ளிகளுடன் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். கடைசியாக இவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ‘பாக்சிங்டே’ டெஸ்ட் போட்டியின் போது முதலிடத்தில் இருந்தார். மூன்றாவது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் (878 புள்ளி) நீடிக்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623855599/ICCTestPlayersRankingSteveSmithKaneWilliamsonViratKohli.html