http://ifttt.com/images/no_image_card.png‘ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட் கற்றுக் கொள்ள ‘கிரிக்குரு’ இணையதளத்தை அறிமுகப்படுத்தினார் சேவக். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் 42. டில்லியை சேர்ந்த இவர், 104 டெஸ்ட் (8586 ரன்), 251 ஒருநாள் (8273 ரன்), 19 சர்வதேச ‘டுவென்டி–20’ (394 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கிரிக்கெட் வீரராக மாற ஆர்வமாக உள்ள இளைஞர்கள், ‘ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொள்ளவும், பயிற்சி பெறவும் ‘கிரிக்குரு’ என்ற அலைபேசி–இணையம் அடிப்படையிலான செயலி, வலைதளத்தை சேவக் அறிமுகப்படுத்தினார். இதற்கான பாடத்திட்டத்தை சேவக், இந்திய அணியின் முன்னாள் வீரர், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இணைந்து தயாரித்துள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623253095/SehwagCricuruAppWebsiteCricketLearningCoachingWebsiteApp.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623253095/SehwagCricuruAppWebsiteCricketLearningCoachingWebsiteApp.html