http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகினார். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, இடம்: சவுத்தாம்ப்டன்) விளையாடுகிறது. இதற்கு தயாராகும் விதமாக இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன், லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இன்று, பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் துவங்குகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். இவரது இடது முழங்கையில் லேசாக வலி, எரிச்சல் இருக்கிறது. அடுத்து உலக டெஸ்ட் பைனலில் விளையாட வேண்டியிருப்பதால், காயம் பெரிதாகாமல் பாதுகாத்துக் கொள்ள இப்போட்டியில் இருந்து விலகினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623252863/EnglandNewZealand2ndTestCricketKaneWilliamsonPulledOut.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623252863/EnglandNewZealand2ndTestCricketKaneWilliamsonPulledOut.html