கோஹ்லிக்கு பெரிய வாய்ப்பு: பார்த்திவ் படேல் நம்பிக்கை | ஜூன் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் வெற்றி பெற்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி, தனது முதல் ஐ.சி.சி., கோப்பை வெல்வார்,’’ என, பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி. இவரது தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஒருமுறை கூட ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களில் கோப்பை வென்றதில்லை. கடந்த 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவரது தலைமையிலான இந்திய அணி பைனல் வரை சென்றது. பின், 2019ல் நடந்த உலக கோப்பையில் (50 ஓவர்) அரையிறுதியோடு திரும்பியது. இவர், முதன்முறையாக ஐ.சி.சி., கோப்பை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனில் வரும் ஜூன் 18–22ல் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில் கோஹ்லி தனது முதல் ஐ.சி.சி., கோப்பையை கைப்பற்றலாம்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622991690/ViratKohliICCTrophyWorldTestChampionshipFinalParthivPatel.html