ரகானே பிறந்த நாள்: இந்திய வீரர்கள் வாழ்த்து | ஜூன் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவின் ரகானே பிறந்தநாளுக்கு, கேப்டன் கோஹ்லி, அஷ்வின், சேவக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்கியா ரகானே. உலக டெஸ்ட் பைனல், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இவர், நேற்று தனது 33வது பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு, கேப்டன் கோஹ்லி, அஷ்வின், சேவக் உள்ளிட்டோர் சமூகவலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிங்க்ஸ் (செல்லமாக). நிறைய அமைதி, மகிழ்ச்சி கிடைக்கட்டும். உங்களுடன் இன்னும் பல மறக்க முடியாத பயணம் அமையட்டும்,’’ என, தெரிவித்திருந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622991036/RahaneBirthDayWishesViratKohli.html