http://ifttt.com/images/no_image_card.pngஇயான் சேப்பல் தேர்வு செய்த ‘டாப்–5’ பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் இஷாந்த், அஷ்வின், ஷமி இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் 77. இவர், தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் சிறந்த ‘டாப்–5’ டெஸ்ட் பவுலர்கள் பட்டியலை தேர்வு செய்துள்ளார். இதில் வேகப்பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் என, மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தவிர, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622991541/ianChappellTop5BowlersIshantShamiAshwin.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622991541/ianChappellTop5BowlersIshantShamiAshwin.html