பிடித்த பேட்ஸ்மேன் கோஹ்லி: சொல்கிறார் பிரட் லீ | ஜூன் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகோஹ்லி தான் எனக்கு பிடித்த பேட்ஸ்மேன்,’’ என, பிரட் லீ தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீயிடம், பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து பிரட் லீ கூறியது: வீரர்களின் சமீபத்திய செயல்பாடுகளை வைத்து பார்க்கையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை விட சிறந்த வீரரை தேர்வு செய்ய இயலாது. இவர் தான் எனக்கு பிடித்த பேட்ஸ்மேன். இவரிடம் நம்பமுடியாத நிறைய சாதனைகள் உள்ளன. இவரிடம் நல்ல மனநிலை, கிரிக்கெட் அறிவு அதிகம் உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622820257/BrettLeeAustraliaViratKohliPatCumminsCricket.html