http://ifttt.com/images/no_image_card.pngஎனது தந்தை மறைந்த போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊக்கப்படுத்தினார்,’’ என, முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 27. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்ற இவர், ஆஸ்திரேலிய தொடரில் விளையாடச் சென்றார். அப்போது அவரது தந்தை காலமானார். ஆனால் ‘கொரோனா’ பாதுகாப்பு வளையம் காரணமாக நாடு திரும்ப முடியாததால், தந்தையின் இறுதிச் சடங்கில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டியில் அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622732378/SirajCricketIndiaFatherDeathRaviShastri.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622732378/SirajCricketIndiaFatherDeathRaviShastri.html