http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கேப்டன் கோஹ்லியுடன் என்னை ஒப்பிட விருப்பமில்லை. ஆனால் இது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என, பாபர் ஆசம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் 26. இதுவரை 33 டெஸ்ட் (2169 ரன், 5 சதம்), 80 ஒருநாள் (3808 ரன், 13 சதம்), 54 சர்வதேச ‘டுவென்டி–20’ (2035 ரன், ஒரு சதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ‘நம்பர்–1‘ இடத்தில் உள்ள இவரது பேட்டிங் ‘ஸ்டைலை’ இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஒப்பிடுகின்றனர். இதுவரை 91 டெஸ்ட் (7490 ரன், 27 சதம்), 254 ஒருநாள் (12169 ரன், 43 சதம்), 90 சர்வதேச ‘டுவென்டி–20’ (3159 ரன், 28 அரைசதம்) போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622732050/BabarAzamPakistanCricketViratKohliIndia.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622732050/BabarAzamPakistanCricketViratKohliIndia.html