இலங்கையை வீழ்த்தியது வங்கம் | மே 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய வங்கதேச அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தாகாவில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (0), சாகிப் அல் ஹசன் (15), முகமது மிதுன் (0) ஏமாற்றினர். கேப்டன் தமிம் இக்பால் (52), முஷ்பிகுர் ரஹிம் (84), மகமதுல்லா (54) கைகொடுத்தனர். வங்கதேச அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 257 ரன் எடுத்தது. இலங்கை சார்பில் தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட் வீழ்த்தினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621794000/BangladeshSriLankaFirstOneDayInternationalCricket.html