http://ifttt.com/images/no_image_card.pngஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2023க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில் ஆசிய கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்க இருந்த இத்தொடர் ‘கொரோனா’ பரவல் காரணமாக வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் மாதம் சவுத்தாம்ப்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடக்கவுள்ளது. தவிர, ‘கொரோனா’ இரண்டாவது அலை பரவி வருவதால், இத்தொடரை வரும் 2023க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621793429/AsiaCupCricketPostponedto2023AsianCricketCouncil.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621793429/AsiaCupCricketPostponedto2023AsianCricketCouncil.html