http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பையில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை விரைவில் வழங்கப்படும் என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது. இதற்காக இந்திய அணிக்கு ரூ. 3.65 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இப்பரிசுத் தொகையை இதுவரை இந்திய வீராங்கனைகளுக்கு பிரித்து வழங்கவில்லை என, சர்வதேச கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் சங்கத்தின் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.ஏ.,) சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621793548/IndianWomenCricketersT20WorldCup2020CricketPrizeMoney.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621793548/IndianWomenCricketersT20WorldCup2020CricketPrizeMoney.html