http://ifttt.com/images/no_image_card.pngரசிகர்கள் விமர்சிப்பதால் எனது ‘பேட்டிங் ஸ்டைலில்’ மாற்றம் செய்யப்போவதில்லை,’’ என, சகா தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரிதிமன் சகா 36. இதுவரை 38 டெஸ்டில் விளையாடி உள்ளார். முன்னாள் கேப்டன் தோனி விளையாடிய நாட்களில் டெஸ்ட் ‘லெவன்’ அணியில் இவருக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. தோனியின் ஓய்வுக்கு பின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வந்தார். சமீபத்தில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட்டிங்கில் ஏமாற்றிய சகா (9, 4 ரன்) மீதமுள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு பதிலாக தேர்வான ரிஷாப் பன்ட், திறமையை வெளிப்படுத்தி அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621703179/WriddhimanSahaCricketIndiaBattingStyleChange.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621703179/WriddhimanSahaCricketIndiaBattingStyleChange.html