சிறந்த பவுலர் சிராஜ்: லட்சுமண் பாராட்டு | மே 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் சிறந்த பவுலராக முகமது சிராஜ் வலம் வருவார்,’’ என, லட்சுமண் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 27. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர், 3 போட்டியில், 13 விக்கெட் கைப்பற்றினார். சமீபத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணி சார்பில் பங்கேற்ற இவர், 7 போட்டியில், 6 விக்கெட் சாய்த்தார். தற்போது இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர், இங்கிலாந்து மண்ணில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621525398/SirajCricketIndiaVVSLaxmanGavaskar.html