கோஹ்லி, அனுஷ்கா ரூ. 2 கோடி நிதியுதவி: ‘கொரோனா’ நிவாரண பணிக்கு | மே 07, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘கொரோனா’ நிவாரண பணிகளுக்காக கோஹ்லி, அனுஷ்கா தம்பதி ரூ. 2 கோடி வழங்கியது. மொத்தம் ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை வீசுகிறது. இதன் தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவின் சச்சின், ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், பிரட் லீ உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர். இதனிடைய 14வது ஐ.பி.எல்., தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டதால் வீடு திரும்பிய இந்திய அணி கேப்டன் கோஹ்லி 32, மனைவி அனுஷ்காவுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்துகிறார். இதற்காக ‘கேட்டோ’ என்ற அமைப்பை துவக்கி, ரூ. 7 கோடி வரை நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். தங்களது பங்களிப்பாக ரூ. 2 கோடி வழங்கினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620388318/ViratKohliAnushkaSharmaDonationCoronoReliefFund.html